செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 27 ஜூன் 2016 (08:13 IST)

இரண்டாவது திருமணம் செய்த அரசு பள்ளி ஆசிரியர் வெட்டிக்கொலை

ராமநாபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள சிவனாந்தபுரத்தை சேர்ந்த ராஜ்குமார் நேற்று முதுகுளத்தூர் ரயில்வே கேட் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.


 
 
மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவந்தார் ராஜ்குமார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னரே தன்னுடைய முதல் மனைவி இருக்கும் போதே 2-வது திருமணம் செய்து கொண்டு பரமக்குடியில் வசித்து வந்தார்.
 
இந்நிலையில், நேற்று முதுகுளத்தூர் ரயில்வே கேட் அருகே, மர்மநபர்கள் சிலரால் அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
குடும்ப பிரச்சனை காரணமாக ராஜ்குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சதேகிக்கும் காவல் துறை, இந்த கொலை வழக்கில், முதல் மனைவியின் சகோதரர் உமாபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.