அரசு காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் : கால்நடை பராமரிப்பு துறை உதவியாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புதுறை உதவியாளர் சங்க கரூர் மாவட்ட பேரவை கூட்டம் அரசு ஊழியர் சங்க மாவட்டக்குழு அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் மரியஉபகாரம் தலைமை வகித்தார். சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் ஆர்.தாமோதரன், அரசு ஊழியர்சங்க மாவட்ட செயலாளர் எம்.சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எல்.பாபு, சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் பி.செல்வி, பி.துரைசாமி ஆகியோர் கூட்டத்தில் பேசினர். புதிய மாவட்ட செயலாளர் நன்றி கூறினார்.
புதிய மாவட்ட செயலாளர் பி.சிவக்குமார், கரூர் கோட்ட செயலாளர் பி.தாமோதரன், செல்வி, குளித்தலை கே.சி.கண்ணன், எம்.சித்ரா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழக அரசு அரசு துறையில் உள்ள காலிபணியிடங்களை நிரப்பிடவேண்டும். ஒப்பந்த முறையை கைவிட வேண்டும். புதிய ஓய்வுதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வுதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றினர்.
சி.ஆனந்தகுமார் - கரூர் மாவட்டம்