புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 மே 2022 (11:07 IST)

சர்வதேச புக்கர் பரிசு வென்ற முதல் இந்திய எழுத்தாளர்! – வாழ்த்து மழையில் கீதாஞ்சலி ஸ்ரீ!

Geetanjali Sri
இலக்கிய உலகில் புகழ்வாய்ந்த உச்ச விருதாக கருதப்படும் புக்கர் விருது இந்த முறை இந்திய எழுத்தாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

திரைப்படங்களுக்கு ஆஸ்கர் போல, இசைக்கு கிராமி விருது போல இலக்கியத்திற்கு புக்கர் பரிசு பிரபலமான ஒன்றாக இருந்து வருகிறது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அல்லது மொழிபெயர்க்கப்பட்டு இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் வெளியிடப்படும் புத்தகத்திற்கு சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு சர்வதேச புக்கர் பரிசு இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ எழுதிய ரெட் சமாதி என்ற நூலுக்கு கிடைத்துள்ளது. இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் டோம்ப் ஆஃப் சாண்ட் என்ற பெயரில் டெய்சி ராக்வெல்லால் என்பவர் மொழிப்பெயர்த்திருந்தார்.

இந்த விருதின் மூலம் முதன்முறை புக்கர் பரிசு பெறும் இந்திய எழுத்தாளராகவும், இந்திய முதல் பெண் எழுத்தாளராகவும் கீதாஞ்சலி ஸ்ரீ சாதனை படைத்துள்ளார்.