1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 30 மார்ச் 2023 (14:59 IST)

அதிமுக கூட்டணியை உறுதி செய்த அமித்ஷா.. அண்ணாமலை ராஜினாமா செய்வாரா? காயத்ரி ரகுராம் கேள்வி

அதிமுகவுடன் தான் கூட்டணி என அமித்ஷா உறுதி செய்துள்ளதை அடுத்து அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் ராஜினாமா செய்வேன் என்று கூறிய அண்ணாமலை ராஜினாமா செய்வாரா என நடிகை காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பி உள்ளார்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊடகத்தில் பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறினார். 
 
இந்த நிலையில் நேற்று அமித்ஷா ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது என்று கூறினார். மேலும் சற்றுமுன் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்த போதும் பாஜக அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறது என்று தெரிவித்தார். 
 
இந்த நிலையில் இது குறித்து நடிகை காயத்ரி ரகுராம் கூறி இருப்பதாவது: பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடர்ந்தால் ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை கூறினார்? 
அண்ணாமலையின் முகத்தில் அறைந்தது போன்ற அமித் ஷா ஜியின் பதில் கொடுத்தார். இப்பொ என்ன? வார்ரூம் முட்டாள்கள் அமித் ஷா ஜியையே இப்போ தாக்குகிறது. ரோஷம் எங்கே? அண்ணாமலை ராஜினாமா செய்ய ரோஷம் இருக்கிறதா என்று முதலில் கேளுங்கள், வார்ரூம்?
 
Edited by Mahendran