புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 19 நவம்பர் 2019 (08:27 IST)

முடிந்தால் நேரில் வாருங்கள்: திருமாவளவனுக்கு காயத்ரி ரகுராம் சவால்

இந்து கோவில் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதற்கு தனது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்த நடிகை காயத்ரி ரகுராம், தற்போது அவருக்கு நேரடியாக டுவிட்டர் மூலம் சவால் விட்டுள்ளார்.
 
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது: நவம்பர் 27ல் மெரினா கடற்கரைக்கு காலை 10 மணிக்கு நான் வருகிறேன். தைரியம் இருந்தால் நேரில் வந்து என்னை மிரட்டுங்கள். திருமாவளவனுக்கு சவால் விடுகிறேன். வெளிப்படையாகவே என்னை அவர் துன்புறுத்துகிறார். இதை நான் இப்படியே விடப்போவதில்லை. மனித உரிமைகள் ஆணையத்திற்கு கொண்டு செல்ல உள்ளேன். போலீசில் புகார் அளிப்பேன். பார்க்கலாம் இதுபோன்ற குண்டர்கள் எல்லாம் எவ்வளவு நாட்களுக்கு தான் எம்.பி.ஆக இருப்பார்கள்
 
முன்னதாக காயத்ரியை கண்டித்து நேற்று விடுதலைச்சிறுத்தைகள் தொண்டர்கள் அவரது வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது