ஆச்சி மசாலா நிறுவனர் மற்றும் பிரபல நடிகர் கொரொனா நிதியுதவி !
ஆச்சி மசாலா நிறுவனரும், பிரபல நடிகர் வசந்த் ஆகிய இருவரும் முதல்வரின் கொரோனா பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி செய்துள்ளனர்.
கொரோனா இரண்டாம் கட்ட அலை உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் அதிகரித்துவருகிறது.
தற்போது, தமிழகத்தில் தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு வருவதால் ஊரடங்கு அமலில் இருந்தாலும் ஒருநாளில் 30 ஆயிரம்பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இத்தொற்றில் இருந்து மக்களைக் கொரொனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. எனவே கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இன்று முதல் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும் என தமிழக அரசும் காவல்துறையும் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு தாரளமான நிதி வழங்கலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள், சமூக அமைப்புகள், பெருந்தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்
இந்நிலையில் சமீபத்தில் சினிமா கலைஞர்களான கவிஞர் வைரமுத்து ரூ 5 லட்சம், அஜித் 25 லட்சம், சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சம் , விக்ரம் ரூ.30 லட்சம் நிவாண நிதி வழங்கினார். தமிழக மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் ரூ.10 லட்சம் வழங்கினார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஆளுநர் மாளிகை வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் புரொகித் ரூ.1 கோடியை வழங்கினார்.
இந்நிலையில் இன்று கன்னியாகுமரி தொகுதி எம்பியும் நடிகருமான விஜய் வசந்த், இன்று தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து முதல்வரின் கொரொனா பொதுநிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கினார். அதேபோல் ஆச்சி மசாலா நிறுவனத்தி தலைவர் பத்மசிங் ஐசக் ரூ.1 கோடி வழங்கினார்.