செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 18 மே 2021 (06:35 IST)

இன்று முதல் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்து: பெறுவது எப்படி?

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரை செய்யப்படுவதாக கூறப்பட்ட நிலையில் அந்த மருந்தை வாங்குவதற்கு சென்னை கீழ்பாக்கம் மருத்துவ மனையிலும் அதன்பின் நேரு ஸ்டேடியத்திலும் நூற்றுக்கணக்கானோர் குவிந்தனர்
 
ஒரே நேரத்தில் ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்கு கூட்டம் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது அதற்கு பதிலாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு நேரடியாக அனுப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது 
 
இந்த நிலையில் இன்று முதல் மருந்து தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்து பெறுவதற்கான இணையதள முகவரியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்று முதல் தனியார் மருத்துவமனைக்கு நேரடியாக ரெம்டெசிவிர் மருந்து அரசு சார்பாக வழங்கப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. இதற்காக பதிவு செய்யும் தமிழக அரசின் இணையதள முகவரி இதுதான்:
 
ucc.uhcitp.in/form/drugs.