Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று செய்முறைத்தேர்வு: ஏற்பாடுகள் தயார்..!

Written By Siva
Updated: புதன், 1 மார்ச் 2023 (08:03 IST)
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் ஒன்றாம் தேதி செய்முறை தேர்வு தொடங்கும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் இன்று செய்முறை தேர்வு தொடங்கப்படுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பொது தேர்வு 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுத உள்ள நிலையில் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு இன்று முதல் செய்முறை தேர்வு ஆரம்பமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. செய்முறை தேர்வு எழுத வரும் மாணவர்கள் தாமதம் என்று தேர்வு மையங்களுக்கு வருவதற்காக பேருந்து வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று முதல் மார்ச் 9ஆம் தேதி வரை செய்முறை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
செய்முறை தேர்வுக்கு பின் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6 முதல் ஏப்ரல் 20 வரை நடைபெறும். 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரை நடைபெறும். 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

என் தம்பியவே திட்றீங்களா?!.. விஜய் சேதுபதிக்கு ஆதரவாக களமிறங்கிய சீமான்!..

பிக்பாஸ் தோல்வி!.. விஜய் சேதுபதி மார்கெட் போன நடிகர்!.. பிரபலம் பேட்டி!...

கொலையில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு!.. கனிமொழி ஆவேசம்..

வீடியோ வேண்டாம்.. நிறுத்துங்க.. சென்னை நிகழ்ச்சியில் டென்ஷனான நிர்மலா சீதாராமன்..

இடைத்தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடுவது வருத்தம் தான்: மாணிக்கம் தாகூர்..

அடுத்த கட்டுரையில்
Show comments