திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (18:49 IST)

முதல்வராவது எப்படி...? ஸ்டாலினுக்கு ஃப்ரி அட்வைஸ் கொடுத்த பெண்!

திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு கிராமங்களுக்கு சென்று மக்களை சந்திக்கும் கிராம சபை மற்றும் ஊராட்சி சபை கூட்டங்களை நடத்தி ஆதரவு திரட்டி வருகிறார். 
 
அந்த வகையில் சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற திமுக ஊராட்சி சபை கூட்டத்தில் பெண் ஒருவர் திமுக செய்த தவறை சுட்டிக்காட்டி ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை எடுத்துச்சொன்னார். 
 
அந்த பெண் கூறியது பின்வருமாறு, யாரும் என்னை ஸ்டாலின் கூட்டத்துக்கு வர சொல்லவில்லை. இங்கு வருவது நானாக எடுத்த முடிவு. அந்தந்தப் பகுதியில் உள்ளவர்களையே அப்பகுதியின் வேட்பாளராக நிறுத்தி தேர்தலைச் சந்திக்க வேண்டும். 
 
இதை விட்டு விட்டு 2016 ஆம் ஆண்டு செய்தது போல செய்யக் கூடாது. உசிலம்பட்டியிலிருந்து ஒருவரை கொண்டுவந்து திருப்பரங்குன்றத்திலும் திருப்பரங்குன்றத்திலிருந்து ஒருவரை உசிலம்பட்டியிலும் போட்டியிட வைத்தால் ஒன்றும் வேலைக்கு ஆகாது. 
 
அந்தந்த தொகுதியிலேயே இருப்பவர்களுக்குத்தான் அங்கிருக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றி நன்றாகத் தெரியும் என மிகவும் வெளிப்படையாக பேசினார். 
 
கூட்டத்தில் பேசிய அந்த பெண் ராஜாஜி தெருவை சேர்ந்த தேவி என்பதும், அவர் வங்கி ஒன்றில் தேசிய வங்கியில் வர்த்தகப் பிரிவில் பணியாற்றுகிறார். தேவி, திமுக உறுப்பினர் இல்லை. ஆனால், அவரது கணவர் திமுகவின் முன்னாள் அடிப்படை உறுப்பினர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.