Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு: மேலும் 4 பேர் அதிரடி கைது

Updated: செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (19:22 IST)
குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக ஏற்கனவே ஒருசிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன் இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருந்த மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கைது செய்யப்பட்டவர்கள் சென்னையை சேர்ந்த தீபக், செய்யாறை சேர்ந்த வினோத்குமார், கூடங்குளத்தை சேர்ந்த அருண்பாலாஜி மற்றும் தேவி என தகவல் வெளிவந்துள்ளது. இந்த நால்வரின் கைதை அடுத்து குரூப் 2ஏ தேர்வில் இதுவரை 14 பேர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நால்வரிடம் நடத்திய விசாரணையில் ரூ.8 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை லஞ்சம் கொடுத்து தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்கள் என தெரிய வந்துள்ளதாக சிபிசிஐடி போலீசார்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் மேலும் கைது நடவடிக்கை தொடரும் என்றும், தவறு செய்த யாரும் தப்பிக்க முடியாது என்றும் போலீசார்கள் தெரிவித்துள்ளனர்.

எல்லாம் காட்டு

டாஸ்மாக்கில் இனிமே ரூ.10 எக்ஸ்ட்ரா வாங்கமாட்டோம்!.. சங்க மாநில தலைவர் பேட்டி...

டாஸ்மாக் முறைகேடு!.. செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு!..

எதிர்காலத்தில் திமுகவை வழிநடத்த தகுதியானவர் யார்? கனிமொழியா? உதயநிதியா? சர்வே முடிவு

7000 கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று.. அனைத்து கல்லூரிகளிலும் பரிசோதனை செய்ய முடிவு...

விஜய்க்கு ஹெலிகாப்டர் ரெடியா இருக்கு!.. வந்து பார்க்கட்டும் - டி.கே.சிவக்குமார்!...

அடுத்த கட்டுரையில்
Show comments