1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 2 டிசம்பர் 2021 (18:49 IST)

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தூக்கில் தொங்கி தற்கொலை: ரெய்டு காரணமா?

தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் அவர்கள் திடீரென தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்தபோது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் ஒன்றில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் ஊழல் நடந்தது தெரியவந்தது
 
இதனையடுத்து போலீசார் வெங்கடாச்சலம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர் என்பதும் அவரது வீட்டில் தங்கம், சந்தனக்கட்டைகள் உள்பட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இதுகுறித்த விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென வேளச்சேரியில் உள்ள தன்னுடைய வீட்டில் வெங்கடாசலம் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்