திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (18:29 IST)

ஓபிஎஸ்-க்கு ஆதரவாக அதிமுக தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

மெரினாவில் ஓபிஎஸ்-ன் பத்திரிகையாளர் சந்திப்புக்கு பிறகு தமிழகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவிவருகிறது. புதன்கிழமை  காலை தனது வீட்டில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ''மறைந்த தமிழக முதல்வர்  ஜெயலலிதாவின் வழியில் தான் நான் ஆட்சி செய்தேன். இனியும் என் பாதை அவர் காட்டிய வழியாகத்தான் இருக்கும்'' என்று  தெரிவித்தார்.

 
அப்போது, ஜெயலலிதாவின் சகோதரர் மகளான தீபாவுக்கு உங்களுடன் சேர்ந்து பணியாற்ற அழைப்பீர்களா எனறு கேட்டதற்கு,  என்னுடன் இணையானது மக்கள் பணியாற்ற அனைவருக்கும் அழைப்பு விடுப்பேன். தீபாவுக்கும் நான் அழைப்பு விடுக்கிறேன்''  என்று ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
 
இது குறித்து தீபாவிடம் கேட்டபோது, 'தன்னுடன் இணைந்து செயல்பட ஓ.பி.எஸ் ஊடகங்களில் அழைப்பு விடுத்ததை  பார்த்தேன். நேரடியாக எந்த அழைப்பும் வரவில்லை. இது குறித்து பின்னர் அறிவிப்பேன்' என தீபா கூறினார்.
 
இந்நிலையில், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு அருகிலும் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், 'உருவங்கள் இரண்டு  உயிர் ஒன்றே' என அதிமுக தொண்டர்கள் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள்.