Daily Horoscope

சென்னையில் பறக்கும் ரயில் மேம்பாலம் சரிந்து விபத்து!

Written By Sinoj
Updated: வியாழன், 18 ஜனவரி 2024 (19:38 IST)
சென்னை ஆதம்பாக்கத்தில் பறக்கும் ரயில் பாலப் பணியின்போது விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை- வேளச்சேரி- பரங்கிமலை இணைக்கும் பறக்கும் ரயில் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், இன்று, ஆதம்பாக்கம் தில்லை  கங்கா நகரில் உள்ள பறக்கும் ரயில் மேம்பாலம் சரிந்து விபத்திற்குள்ளானது.

கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, இரு தூண்களுக்கு இடையே உள்ள பகுதி இடிந்து,  விழுந்து ரயில் மேம்பாலம் சரிந்து விபத்திற்குள்ளானது.

இரு தூண்களுக்கு இடையே 80 அடி நீளமுள்ள பாலத்தின் பகுதி சரிந்து விழுந்து விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த விபத்தில் யாரும் பாதிக்கப்படவில்லை ; இவ்விபத்து பற்றி ஆதம்பாக்கம் போலீஸார் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

ஆதம்பாக்கம் தில்லை  கங்கா நகரில் உள்ள பறக்கும் ரயில் மேம்பாலம் சரிந்து விபத்திற்குள்ளானதால், அப்பகுதியில்  போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல்.. ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்ற பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள்...

ஸ்மார்ட் சிட்டிக்கு மத்திய அரசு கொடுத்த நிதியில் சோபா வாங்கிய திமுக அரசு.. சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சி..

ஸ்டாலினை விட 2 நாட்களில் இருமடங்கு முதலீடுகள்.. இங்கிலாந்தில் முதல்வர் விஜய் சாதனை..

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தவெக வெற்றி அவ்வளவு எளிதா? திமுக, அதிமுக என்ன செய்யும்?

11 ஆயிரம் கோடி ஒப்பந்தம்!.. 7 ஆயிரம் பேருக்கு வேலை!. லண்டனில் கலக்கும் விஜய்!..

அடுத்த கட்டுரையில்
Show comments