கர்நாடகாவில் கனமழை: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்தில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியில் கரைபுரண்டு வெள்ளம் காட்சியின் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன
காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து ஒகேனக்கல் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
கர்நாடக அணையிலிருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி நீர் தமிழகம் நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அடுத்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
காவிரி கரையோரம் உள்ள தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாறி செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது