செவ்வாய், 25 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: ஞாயிறு, 19 ஜூன் 2016 (15:15 IST)

சென்னையில் பிரபல ரவுடி பப்லுவுக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னையில் பிரபல ரவுடி பப்லுவுக்கு போலீஸ் வலைவீச்சு

சென்னையில் வியாசர்பாடி பகுதியில் மாமூல் தராதவர்களை அரிவாளால் வெட்டிய பிரபல ரவுடி பப்லுவை போலீசார் கைது செய்தனர்.
 

 
சென்னை வியாசார்பாடியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, பப்லு தலைமையிலான ரவுடி கும்பல் ஒன்று இரவு நேரத்தில் பொதுமக்களை தாக்கி வந்தனர். மேலும், அந்த பகுதியில் உள்ள கடைகளில் கட்டாய மாமூல் வசூல் செய்தனர்.
 
அப்போது, ஹரி என்பவரின் பஞ்சர் கடையில் மாமூல் கேட்டபோது அவர் தர மறுத்துவிட்டார். இதனால், அந்தக் கும்பல் ஹரி மற்றும் அவரது நண்பர்கள் தீபன், ராஜ்குமார் ஆகியோரை வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர்.
 
இது குறித்து, அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் ரவுடி பப்லு தலைமையிலான கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.
 
ரவுடி பப்லு மீது 5 கொலை வழக்கு உள்பட 20 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.