செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 21 மே 2019 (13:59 IST)

கல்லூரி மாணவர்களை கத்தியால் குத்திய பிரபல கட்சியின் பிரமுகர் !

சென்னை பல்லாவரம் அடுத்த நாகல்கேணி பகுதியில் வசித்து வந்தவர் விக்னேஷ். இவர் அங்குள்ள பள்ளியில் +2 படித்து வருகிறார்.  இவரும் அவரது நண்பரான நந்தா என்பவரும் கடந்த 17 ஆம் தேதி குரோம் பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கன்னி ஆலய திருவிழாவில் கலந்துகொள்வதற்காக ஒரு சக்கர வாகனத்தில் சென்றனர்.
அப்போது நாகல்கேணியைச் சேர்ந்த பம்மல் நகர பா.ஜனதா எஸ் .சி அணி தலைவரான மதன் (42) என்பவருக்கும் , விக்னேஷ் - நந்தா ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
 
இதில் ஆத்திரம் அடைந்த மதன் தனது மகன் நித்தியானந்தம் என்பவருடன் சேர்ந்து இருவரையும் கத்தியால் குத்தியால் குத்தினார். 
 
இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த விக்னேஷ் - நந்தா ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
 
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் மதன் மற்றும் அவரது மகனை நித்தியானந்தம் ஆகியோரை கைது செய்து விசாரித்துவருகின்றனர்.
 
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.