வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : புதன், 8 ஜனவரி 2020 (18:27 IST)

குழந்தை பெற்றுக் கொள்ளாதது குறித்து... பிரபல நடிகை விளக்கம் !

குழந்தை பெற்றுக் கொள்ளாதது ஏன் என்பதை முதன் முதலாக நடிகை விஜய சாந்தி தெரிவித்துள்ளார்.
கல்லுக்குள் ஈரம் என்ற தமிழ் படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனவர் விஜயசாந்தி. இவர் , தமிழ், தெலுங்கு படங்களிம் முன்னஈ நடிகையாக உயர்ந்து, அப்போதைய லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தவர். 
 
இந்நிலையில் திடீரென நடிப்புக்கு இடைவெளிவிட்டு அரசியலுக்கு சென்றார். இந்நிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் படத்தில் 13 வருடங்களுக்கு பின் விஜய சாந்தி மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
 
இந்நிலையில், தான் ஏன் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்று அவர்  தெரிவித்துள்ளார்.
 
அதில், ’என் கணவரிடம் நமக்கு குழந்தைகள் வேண்டாமென சொலிவிட்டேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டார். குழந்தைகள் இருந்தால் சுயநலம் வந்துவிடும், அதனால் பொதுத்தொண்டு செய்ய முடியாது என்பதால் குழந்தை வேண்டாம் என முடிவு செய்தேன். 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குழந்தை இல்லாமல் சுயநலமின்றி தொண்டு செய்தார் என செய்தார் என தெரிவித்துள்ளார்.