திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 31 மார்ச் 2022 (15:54 IST)

தகாத உறவு வைத்திருந்த பெண்ணை கத்தியால் குத்திய கள்ளக்காதலன்

ராணிப்பேட்டை அருகே தகாத உறவு வைத்திருந்த பெண்ணை கள்ளக்காதலனே கத்தியால் குத்தி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த மங்கலம் என்ற பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிகிறார். இவருக்கு காமாட்சி என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், காமாட்சிக்கு யும் லட்சுமி புரம் என்ற பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவருக்கும் தகாத உறவு இருந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், இரவு வேலைக்கு காமாட்சியியின் கணவர் சென்றதும், அவரது  இரவு ஜெயப்பிரகாஷ் சென்றதகக் தெரிகிறது.இதனால் காமாட்சிக்கும்  ஜெய்பிரகாசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.அப்போது, ஆத்திரம் அடைந்த ஜெயப்பிரகாஷ் கத்தியை எடுத்து காமாட்சியை குத்திவிட்டார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். போலீஸார்  ஜெயபிரகஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.