திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: சனி, 27 மே 2017 (06:15 IST)

ஜெ. படத்தை வைத்தால் வீரப்பன், ஆட்டோ சங்கர் படத்தை வைப்பேன். இளங்கோவன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை சட்டமன்றத்தில் வைக்க கூடாது என்று காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் போர்க்கொடு தூக்கி வருகின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என்று உறுதி செய்யப்பட்ட ஒருவரது புகைப்படத்தை எப்படி சட்டமன்றத்தில் வைக்கலாம் என்பது தான் அவர்களுடைய கேள்வி



 


இதுகுறித்து காங்கிரஸ் பிரமுகர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியபோது, 'சட்டசபையில், ஜெ., படம் வைக்கப்பட உள்ளதாகவும், அதை திறக்க பிரதமரை அழைத்ததாகவும், முதல்வர் பழனிசாமி கூறுகிறார். நீதிமன்றத்தால் குற்றவாளி என, அறிவிக்கப்பட்டவரின் படத்தை, முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., போன்றோர் படங்களுடன் வைப்பது, அவர்களை அவமானப்படுத்துவதாகும்.

அவ்வாறு, ஜெ., படம் வைத்தால், ஐ.ஜி., அலுவலகத்தில் வீரப்பன், ஆட்டோ சங்கரின் படங்களை வைப்போம். எம்.ஜி.ஆர்., சமாதி அருகே, ஜெ., உடல் புதைக்கப்பட்டது. அவ்விடத்தில் மணி மண்டபம் கட்ட உள்ளதாகவும், நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் கூறுகின்றனர். இது, மிகப்பெரிய தவறு. கடற்கரை, அரசு இடம். அங்கு அரசு நிதி ஒதுக்கி, மணி மண்டபம் கட்டுவது ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றிருந்தாலும் தமிழக மக்களுக்கு காவிரி பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகளை தீர்த்தவர் ஜெயலலிதாதான். அவர் ஆரம்பித்த வைத்த பல திட்டங்கள் மூலம் இன்று கோடானுகோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர். எனவே அவரை வீரப்பனோடும், ஆட்டோ சங்கரோடும் ஒப்பிடக்கூடாது என்று ஆளுங்கட்சி பிரமுகர்கள் கூறி வருகின்றனர்.