Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார் பந்தயம் நடத்த நிதி இருக்கு, ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க நிதியில்லையா? ஈபிஎஸ்

Written By Siva
Updated: வெள்ளி, 4 அக்டோபர் 2024 (15:58 IST)
தனியார் நடத்திய கார் பந்தயத்திற்கு கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்த திரு. முகஸ்டாலினின் திமுக அரசு, மத்திய அரசு நிதி வரவில்லை என்ற காரணம் கூறி ஆசிரியர்களுக்கு சென்ற மாதத்திற்கான சம்பளம் வழங்காதது கடும் கண்டனத்திற்குரியது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கான மத்திய அரசின் நிதி பள்ளிக் கல்வித்துறைக்கு வரவில்லை என்ற காரணம் கூறி நிரந்தர ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் என்று சுமார் 32,500 பேருக்கு செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படவில்லை என்று நாளிதழ்கள் மற்றும் ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. 
 
தமிழகத்தின் எதிர்கால சந்ததியினரை உருவாக்கக்கூடிய செம்மையான பணியினை மேற்கொள்பவர்கள் ஆசிரியர் சமுதாயத்தினர். அப்படிப்பட்ட மேன்மையான பணியினை மாதம் முழுவதும் செய்துவிட்டு, மாதக் கடைசியில் அதற்கு உண்டான ஊதியத்தை வாங்காமல் வெறுங்கையுடன் வீடு திரும்பும்பொழுது வீட்டு வாடகை, குடும்பச் செலவுகள், வாங்கியக் கடனை திருப்பிச் செலுத்துதல் என்று பணத்தை கட்டமுடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர் ஆசிரியர் பெருமக்கள்.
 
தனியார் நடத்திய கார் பந்தயத்திற்கு கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்த திரு. முகஸ்டாலினின் திமுக அரசு, மத்திய அரசு நிதி வரவில்லை என்ற காரணம் கூறி ஆசிரியர்களுக்கு சென்ற மாதத்திற்கான சம்பளம் வழங்காதது கடும் கண்டனத்திற்குரியது. 
 
எனவே, மாநில அரசின் நிதியிலிருந்து சுமார் 32,500 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்காமல் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்குமாறும், இனி மாதாந்திர சம்பளத்தை நிறுத்தாது வழங்க வேண்டும் என்றும் திரு. ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

பிரியாணி சாப்பிட்டதால் உடல்நலக்குறைவு.. நஷ்ட ஈடாம ரூ.96,500 வழங்க உத்தரவு..

ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் பெண்களுக்கு இலவச பேருந்து பயண வசதி.. உபி முதல்வர் யோகி அறிவிப்பு...

மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து.. பிறந்து சில மணி நேரம் ஆன 3 குழந்தைகள் பலி..

2 நாட்களுக்கு பின் இன்று கூடும் சட்டப்பேரவை!.. முதல்வர் துறைகளின் மீது விவாதம்!....

75 நாடுகளுக்கு விசா வழங்குவதை தடை செய்த அதிபர் டிரம்ப்.. தடையை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்...

அடுத்த கட்டுரையில்
Show comments