Daily Horoscope
✕

பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க 4 நாட்கள் மட்டுமே அவகாசம்.. சுமார் 2 லட்சம் பேர் விண்ணப்பம்..!

Written By Siva
Updated: வியாழன், 1 ஜூன் 2023 (07:42 IST)
பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே அவகாசம் இருக்கும் நிலையில் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இதுவரை விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
 சமீபத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து மாணவ மாணவிகள் மிகுந்த ஆர்வத்துடன் பொறியியல் கல்லூரிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கடந்தாண்டு 2,11,417 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் இந்த ஆண்டு 2,11,905 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளன. கடந்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கையை இந்த ஆண்டும் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே அவகாசம் இருக்கும் நிலையில் பொறியியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவ மாணவிகள் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

சென்னையில் ரோட் ஷோ செய்யும் பிரதமர் மோடி!.. ஏற்பாடுகள் தீவிரம்..

டெல்லி காவல் அதிகாரி மீது பாலியல் புகார் கொடுத்த பெண் பத்திரிகையாளர் கைது! எதிர்க்கட்சிகள் கண்டனம்..

3 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு.. முழு விவரங்கள் இதோ..

போன வாரம் முழுவதும் பங்குச்சந்தை சரிவு.. இந்த வாரம் மீண்டு வந்ததால் நிம்மதி...

தனுஷின் இயக்கத்தில் இணைந்தாரா நாஞ்சில் சம்பத்?!.. அவரே சொன்ன விளக்கம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments