தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவது உறுதி- அமைச்சர் செந்தில்பாலாஜி
தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவது உறுதி என கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில். தமிழகத்தில் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு 2மாதங்களுக்கு ரூ.27.50 உயர்த்த பரீசீலிக்கப்பட்டுள்ளதாகவும், 2 மாதங்களில் 301-400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.147.50 உயர்த்த பரிசீலனைசெய்யப்பட்டுள்ளதாகவும்,2 மாதங்களில் 501-600 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு ரூ.155உயர்த்த பரிசூலிக்கப்பட்டுள்ளதாகவும், 2 மாதங்களில் 601-700 யூனிட்கள் பயன்படுத்துவோருக்கு ரூ.275 உயர்த்த பரிசீலனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்கு எதிர்காட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவது உறுதி என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
அப்போது அவர் கூறியதாவது: சிறு, குறு நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வு குறைப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும், மின் கட்டண உயர்வு பற்றி பல நிறுவங்களிடமும் பரிசீலிக்கப்பட்டதாகவும் கூறினார்.
மின் கட்டண உயர்வைக் குறைக்கும்படி பல நிறுவங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பரிசீலிக்கப்படும். வீடுகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ள மின் கட்டண உயர்வில் மாற்றமில்லை என உறுதிபட தெரிவித்துள்ளார்.