செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 16 ஏப்ரல் 2024 (13:38 IST)

பிரசாரம் நிறைவடைந்த பின் விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை: சத்யபிரதா சாகு

Sathya Pradha Saghu
தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த பின் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
 
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் முடிவடை உள்ளதை அடுத்து பிரச்சார காலம் முடிவடைந்த உடன் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். அவர் கூறியதன் முக்கிய அம்சங்கள் இதோ:
 
பிரசாரம் நிறைவடைந்த பின், தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த கூடாது. தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்களில் தேர்தல் பரப்புரை செய்ய கூடாது. விதிகளை மீறினால் 2 ஆண்டு சிறை, அபராதம் விதிக்கப்படும்
 
வாக்காளர் அல்லாதவர்கள் நாளை மாலை 6 மணிக்கு மேல் தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும். மேலும் தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் உள்ளிட்ட இடங்களில் வெளியாட்கள் யாரும் தங்க கூடாது. இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran