வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 ஏப்ரல் 2024 (14:34 IST)

பாராளுமன்ற தேர்தலுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தலா? சத்ய பிரத சாகு பதில்..!

விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ காலமானதை அடுத்து அந்த தொகுதிக்கு வரும் பாராளுமன்ற தேர்தலுடன் தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரத சாகு பதில் அளித்துள்ளார் 
 
விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தி கடந்த தினங்களாக உடல் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென சமீபத்தில் காலமானார்/ அவரது மறைவை அடுத்து இன்று அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு லோக்சபா தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த சத்ய பிரத சாகு, விக்கிரவாண்டி தொகுதி காலியாக உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்றும் விக்கிரவாண்டி தொகுதிக்கு லோக்சபா தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்
 
தமிழகத்தில் முதல் கட்ட தேர்தல் நடைபெறுவதால் அதன் பிறகு ஆறுகட்ட தேர்தல் நடைபெற இருப்பதால் அதில் ஏதாவது ஒரு தேர்தலுடன் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran