Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுப்பவர்களுடன் எதற்கு கூட்டணி? சட்டப்பேரவையில் ஈபிஎஸ் கேள்வி

Written By Siva
Updated: திங்கள், 9 அக்டோபர் 2023 (16:21 IST)
தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் கட்சியுடன் ஏன் கூட்டணி வைத்துள்ளீர்கள் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று காவிரி நீரை தமிழகத்திற்கு தர கர்நாடக மாநிலத்திற்கு உத்தரவிட வேண்டும் என்ற தீர்மானத்தை முதல்வர் முக ஸ்டாலின்  தாக்கல் செய்த நிலையில் இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இந்தியா கூட்டணியின் கூட்டத்திற்கு முதல்வர் பெங்களூர் சென்ற போது நட்பின் அடிப்படையில் கர்நாடகாவில் காவிரியில் நீர் கேட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

அதற்கு பதில் கூறிய அவை முன்னவர் துரைமுருகன் ’பல ஆண்டுகளாக அவர்களிடம் பேசியும் நீர் கிடைக்காததால் தான் நீதிமன்றம் சென்றோம் என்று தெரிவித்தார்.  அப்படி என்றால் அப்படிப்பட்ட கட்சியுடன் ஏன் கூட்டணி வைத்தீர்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேட்கும்போது ’பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு தான் இந்தியா கூட்டணி, கொள்கை அடிப்படையில் அல்ல என துரைமுருகன் பதிலளித்தார்.

Edited by Siva

எல்லாம் காட்டு

விஜய் இப்படி பண்ணக்கூடாது!.. கவனமா இருக்கணும்!.. திருமா அட்வைஸ்!..

தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை முதல்வர் விஜய் உசிலம்பட்டியில் தொடங்கி வைப்பது ஏன்? முக்கிய காரணம் இதுதான்...

திமுக எம்.எல்.ஏக்கள் வெளியேறியவுடன் நிறைவேற்றப்பட்ட முக்கிய மசோதாக்கள்.. பாமக, கம்யூனிஸ்ட்கள் எதிர்ப்பு...

4 ரேஷன் கடைகளில் பறக்கும் படை சோதனை.. ஸ்டாக் குறைவு என கண்டுபிடிப்பு.. உடனே சஸ்பெண்ட்.. இதுதாண்டா தவெக அரசு...

புத்தி அப்படி!.. தரங்கெட்ட முதல்வர்!.. விஜயை அட்டாக் பண்ணும் முரசொலி!...

அடுத்த கட்டுரையில்
Show comments