1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 25 ஜூன் 2023 (15:11 IST)

தமிழ்நாட்டை காப்பாற்ற தெரியாதவர் பீகார் சென்று பிரதமரை உருவாக்க போகிறாரா? ஈபிஎஸ்

edappadi
தமிழ்நாட்டையே காக்க தெரியாதவர் பீகார் சென்று பிரதமர் வேட்பாளரை உருவாக்க போகிறாரா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார் 
 
சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்துள்ளதாக முதல்வர் கூறுவது பொய் என்றும் முப்பதாயிரம் கோடி ஊழல் கொடுத்து பேசினால் வழக்கு தொடர்வேன் என்று பயமுறுத்துகிறார்கள் என்றும் தெரிவித்தார். 
 
இரண்டு ஆண்டு ஆட்சி எப்போது போகும் என்று மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றார் என்றும் இரண்டு ஆண்டுகளில் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். 
 
தொட்டு பார், சீண்டிப்பார் என்று முதல்வர் பேசுகிறார், எங்களை அடித்தால் நாங்கள் திருப்பி அடிப்போம் நீங்கள் தாங்க மாட்டீர்கள் என்று பேசுகிறார், இப்படிப்பட்ட முதலமைச்சர் ஆட்சி செய்வது தமிழகத்துக்கு அவமானம் என எடப்பாடி பழனிச்சாமி பேசினார். 
 
மேலும் தமிழ்நாட்டையே காப்பாற்ற முடியாத முதலமைச்சர் மு க ஸ்டாலின் பீகாரருக்கு சென்று சர்வ கட்சி தலைவர்களுடன் சேர்ந்து பிரதமரை உருவாக்க போகிறாரா என்றும் அவர் கூறியுள்ளார்
 
Edited by Siva