திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 24 ஜூன் 2023 (09:19 IST)

திருமணம் செய்து கொள்ளுங்கள்: ராகுல் காந்திக்கு அட்வைஸ் செய்த லாலு பிரசாத்..!

முன்னாள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி 53 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கும் நிலையில் அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் அட்வைஸ் தெரிவித்துள்ளார். 
 
நேற்று பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவர் திருமணம் செய்து கொள்ளுமாறு நான் உங்களிடம் முன்னரே கூறியிருக்கிறேன். ஆனால் நீங்கள் எனது அறிவுரையை கேட்பதில்லை. 
 
உங்களுக்கு முன்பே திருமணம் நடந்திருக்க வேண்டும், நீங்கள் இன்னமும் திருமணம் செய்யாமல் இருப்பது உங்கள் தாய்க்கு வருத்தத்தை தருகிறது. எனவே திருமணம் செய்து கொள்ளுங்கள்ம் இப்போதும் காலம் உள்ளது. உங்களது திருமண ஊர்வலத்தில் பங்கேற்க நாங்கள் ஆவலாக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். 
 
பீகார் பாட்னாவில் நடந்த ஆலோசனை கூட்டம் சீரியஸ் ஆக சென்று கொண்டிருந்த நிலையில் அதை கலகலப்பாக லாலு பிரசாத் யாதவ் மாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Mahendran