எட்டுப் போட்டு விளையாடிய எடப்பாடியார்! – வைரலான புகைப்படம்!
சேலத்தில் அம்மா உடற்பயிற்சி மையத்தை திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள உபகரணங்களில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் அம்மா உடற்பயிற்சி மையம் மற்றும் அம்மா பூங்கா ஆகியவற்றை திறந்து வைத்தார். இளைஞர்கள் உடற்பயிற்சி செய்யும் வகையில் நவீன உடற்பயிற்சி உபகரணங்களோடு நவீன பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது உடற்பயிற்சி மையம். அதுபோல பெரியவர்கள், குழந்தைகள் பொழுதை போக்கும் விதமாகவும், பெரியவர்கள் காலாற நடந்து பயிற்சி செய்யவும் சுற்றுசூழல் பூங்கா ஒன்றையும் அமைத்திருக்கிறார்கள்.
உடற்பயிற்சி மையம் மற்றும் பூங்காவை திறந்து வைத்த முதல்வர் அங்குள்ள உபகரணங்களில் உடற்பயிற்சி செய்து பார்த்தார். பிறகு பூங்காவுக்கு சென்ற அவர் அங்குள்ள டனோசர் பொம்மையோடு போட்டோ எடுத்து கொண்டார். பிறகு பெரியவர்கள் நடப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 8 போன்ற வளைவு பாதையில் சிறிது நேரம் நடந்தார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.
பலர் அந்த புகைப்படங்களுக்கு ஆதரவாகவும், அதேசமயம் சிலர் கிண்டல் செய்தும் பதிவுகளை இட்டு வருகின்றனர்.