1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 27 ஏப்ரல் 2023 (07:36 IST)

நாம் பிரிந்தால் எதிரிகளுக்கு வெற்றி கிடைக்கும்: அமித்ஷாவை சந்தித்த பின் ஈபிஎஸ் பேட்டி..!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பின்னர் அதிமுக பாஜக கூட்டணி பிரிந்தால் எதிரிகளுக்கு தான் வெற்றி கிடைக்கும் என கூறியதாக செய்திகள் வெளியானது. 
 
நேற்று டெல்லியில் அமித்ஷாவை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அதிமுக பிரமுகர்களும் அண்ணாமலை உள்பட பாஜக பிரமுகர்களும் இருந்தனர். 
 
இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி நாம் பிரிந்தால் எதிரிகளுக்கு வெற்றி எளிமையாகிவிடும் என்று கூறிய நகர தகவல் வெளியாகி உள்ளது.
 
மேலும் வரும் நாட்களில் கூட்டணியில் குழப்பம் இல்லாமல் செயல்படுவது பற்றி விவாதிக்கப்பட்டதாகவும் அதிமுக பாஜக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக தொடங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva