வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 2 மே 2018 (12:39 IST)

சமூக வலைத்தளங்களில் கிண்டல் - எடப்பாடி அரசு விளம்பரம் நீக்கம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பற்றிய அரசு விளம்பரம் கிண்டலுக்கும், கடும் விமர்சனத்திற்கும் ஆளானதால் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

 
பொதுவாக, ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும் போது, அந்த ஆட்சியின் புகழ் பாடும் அரசு விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டு அரசு தொலைக்காட்சி மற்றும் திரையரங்குகளில் ஒளிபரப்புவது வழக்கமான ஒன்றுதான். அதேபோல், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பற்றிய ஒரு விளம்பரம் திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
 
அதில், எடப்பாடி சாமியின் பெயர் அர்ச்சனை செய்யுங்கள் என ஒரு பெண் கூறுவது போலவும், திருப்பதி ஏழுமலையான் உருவத்தில் எடப்பாடி பழனிச்சாமியும் உருவம் தெரிவது போலவும் அந்த விளம்பரம் உருவாக்கப்பட்டிருந்தது.
 
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கும் ஆளானது. முதல்வரை கிண்டலடித்து ஏகப்பட்ட மீம்ஸ்களும் வெளிவந்தன.
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இந்த விளம்பரம் நீக்கப்படும் என தெரிவித்துள்ளார்.