செந்தில் பாலாஜியின் சகோதரருக்கும் இதய நோய் பிரச்சனையா? அமலாக்கத்துறை தகவல்
செந்தில் பாலாஜி சகோதரர் தனக்கும் இதய நோய் பிரச்சனை இருந்தால் தன்னால் நேரில் ஆஜராக முடியவில்லை என்று கூறியதாக உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துடைய தகவல் தெரிவித்துள்ளது
ஏற்கனவே செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதனால் அவரிடம் விசாரணை செய்ய முடியாத நிலை அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு உள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் தற்போது தனக்கும் இதய பிரச்சனை இருப்பதால் நேரில் ஆஜராக நான்கு வாரங்கள் அவகாசம் கோரியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இது செந்தில் பாலாஜிக்கும் , அவரது சகோதரருக்கும் வாடிக்கையாகிவிட்டது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Mahendran