Daily Horoscope
✕

திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.. ஆவணங்களை அள்ளி சென்றதாக தகவல்..!

Written By Siva
Updated: வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (07:47 IST)
திமுக பிரமுகர் சாமிநாதன் என்பவரது வீட்டில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் அவரது வீட்டில் இருந்து ஆவணங்களை அள்ளிச் சென்றதாக கூறப்படுகிறது. 
 
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதன் அவர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை செய்தது. 
 
இந்த சோதனை தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில்  சாமிநாதன் தோட்டத்து பங்களாவில் சில ஆவணங்கள் கிடைத்ததாகவும் அந்த ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் அள்ளிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. 
 
திமுக பிரமுகர். சாமிநாதன் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. அதனால்தான் சாமிநாதனை குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை செய்துள்ளதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

உங்களை மாதிரி விஜய் இல்லை!.. திமுகவுக்கு திருமாவளவன் பதிலடி!..

சக பெண் ஊழியருக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்த பொறியாளர்.. 2 வருடத்திற்கு பின் விடுதலை செய்ய கோரிக்கை...

காலம் கனிந்தது.. பழம் நழுவி பாலில் விழுந்தது.. உங்களுக்கு ஏன் காண்டு?!.. கொந்தளித்த திருமா...

சீமானுக்கு கீழே இறக்குறவங்களுக்கு அறிவே இல்ல!.. திருமாவளவன் கோபம்!..

மனு கொடுக்க வரும் ராகுல் காந்தியை சந்திக்க மறுப்பு.. உச்சநீதிமன்ற நீதிபதி அதிரடி...

அடுத்த கட்டுரையில்
Show comments