திருமாவளவனுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னம்!
வரும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் என இரண்டு தொகுதிகளை பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும் சிதம்பரம் தொகுதியில் தனிச்சின்னத்திலும் போட்டியிட முடிவு செய்தது
இந்த நிலையில் சிதம்பரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திருமாவளவனுக்கு சின்னம் ஒதுக்கக்கூறி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது. இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த தேர்தல் ஆணையம் சற்றுமுன் அவருக்கு 'பானை' சின்னத்தை ஒதுக்கியுள்ளது. எனவே திருமாவவன் பானை சின்னத்தில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
மேலும் தமிழகம் தவிர விடுதலைச்சிறுத்தைகள் கட்சி ஆந்திராவில் 6 தொகுதிகளிலும், கேரளாவில் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது இந்த தொகுதிகளிலும் இக்கட்சியின் வேட்பாளர்கள் பானை சின்னத்தில்தான் போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.