மாநிலம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை மாற்ற வேண்டும்: மின்வாரியம் உத்தரவு
மாநிலம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்களை உடனடியாக மாற்ற வேண்டும் என மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து மின்வாரிய பொறியாளர்களுக்கு, தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மின் நுகர்வோரின் வசதிக்காகவும், உரிய வருவாயை ஈட்டவும் பழுதடைந்த மீட்டர்கள் உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்றும், சென்னை, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருச்சி, நாகை ஆகிய 5 மாவட்டங்களில் 10,000க்கும் அதிகமான மீட்டர்கள் பழுது அடைந்திருப்பதாக புகார் வந்துள்ளது என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் மாநிலம் முழுவதும் உள்ள பழுதடைந்த மீட்டர்களை மாற்றிய பின், அதுகுறித்த விவரங்களை மின்னஞ்சலில் அனுப்ப உத்தரவு மின்வாரிய பொறியாளர்களுக்கு, தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் அறிவுறுத்தியுள்ளார்,
எனவே மாநிலம் முழுவதும் பழுதடைந்த மின் மீட்டர்கள் விரைவில் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran