திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 27 டிசம்பர் 2023 (17:32 IST)

மின் கட்டணம் செலுத்த புதிய வசதி.. TANGEDCOவின் அசத்தல் அறிவிப்பு..!

tneb
மின் கட்டணம் செலுத்துவதற்கு ஏற்கனவே இணையதளம் மற்றும் செயலி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிய வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக TANGEDCO அறிவித்துள்ளது.

அதன்படி மின்கட்டணம் செலுத்துவதற்கான குறுஞ்செய்தி உங்கள் மொபைலுக்கு வரும். அந்த குறுஞ்செய்தியில் இருக்கும் இணைப்பை பயன்படுத்திய கட்டணத்தை செலுத்தலாம்.

குறுஞ்செய்திகள் உள்ள இணைப்பை முதலில் கிளிக் செய்ய வேண்டும்.

அதன் பிறகு அதன் அருகில் உள்ள  பெட்டியில் உள்ள கேப்சாவை உள்ளிட வேண்டும்.
இதனை அடுத்து கட்டணம் செலுத்தும் செயல் முறையை தொடங்க பேமெண்ட் ஆப்ஷன் என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.

இதன் பின்னர் பரிவர்த்தனைக்கான பாதுகாப்பு கட்டண நுழைவாயிலுக்குள் நீங்கள் திருப்பி விடப்படுவீர்கள்.  அதன் பிறகு எளிதாக உங்கள் மின் கட்டணத்தை செலுத்தி விடலாம் என்று TANGEDCO அறிவித்துள்ளது.

இந்த வசதியின் மூலம் செயலி மற்றும் இணையதளம் செய்யாமல் குறுஞ்செய்தி மூலம் கிளிக் செய்து மின்கட்டணத்தை எளிதாக செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran