வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 25 டிசம்பர் 2023 (13:29 IST)

இந்தி பேசும் மக்கள் குறித்து தயாநிதிமாறன் பேசியதில் தவறில்லை: துரை வைகோ

இந்தி பேசும் மக்கள் குறித்து தயாநிதி மாறன் பேசியதில் எந்தவித தவறும் இல்லை என மதிமுக முதன்மைச் செயலாளர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஆங்கிலம் தெரிந்ததால் தான் தமிழக இளைஞர்கள் படித்துவிட்டு நல்ல நிறுவனங்களில் கை நிறைய சம்பளம் வாங்குகிறார்கள் என்றும் ஆனால் இந்தி பேசுபவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து டாய்லெட் கழுவுகிறார்கள் என்றும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தயாநிதி மாறன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தயாநிதி மாறனின் இந்த பேச்சுக்கு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் திமுக எம்பி தயாநிதி மாறன் ஹிந்தி பேசும் மக்கள் குறித்து பேசியதில் எந்த தவறும் இல்லை. ஆங்கிலம் தெரியாததால் அவர்கள் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கட்டட வேலை, சாலை பணி உள்ளிட்ட சாதாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக மக்கள் இந்தியை எதிர்த்ததால் உலக அளவில் பெரிய பதவிகளில் தமிழர்களால் வர முடிந்துள்ளது.
 
தயாநிதி மாறனின் பேச்சு,  உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வெட்டி ஒட்டி பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மக்களிடம் பரப்பப்பட்டு வருகிறது. வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த பாஜகவினர் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்’ என்று துரை வைகோ கூறியுள்ளார்.

Edited by Mahendran