புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 30 நவம்பர் 2021 (07:30 IST)

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை?

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் இன்றும் 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் ஏழு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதன்படி தூத்துக்குடி, திருவள்ளூர், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, கடலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் மேலும் சில மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்