செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (18:36 IST)

பெண் டி.எஸ்.பி. தாக்கப்பட்ட சம்பவம்.. தலைமறைவாக இருந்தவர் கைது.. கைதான சில நிமிடங்களில் எலும்பு முறிவு..!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண் டி.எஸ்.பி. கடந்த சில நாட்களுக்கு முன் தாக்கப்பட்டார். 
 
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே   2 இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்ப கும்பல், காளிக்குமார் என்பவரை, அரிவாளால்  சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில் படுகாயம் அடைந்த காளிக்குமாரை மீட்டு, மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.‌ 
 
இந்த நிலையில் காளிக்குமாரை கொலை செய்த குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி காளிகுமார் உறவினர்கள் அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்‌. அப்போது அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான போலீசார், மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தனர்.‌ அப்போது போராட்டக்காரர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையே அடிதடி ஏற்பட்ட நிலையில், டிஎஸ்பி காயத்ரியின் தலை முடியை ஒருவர் இழுத்து தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்த நிலையில் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்திய 7 பேர் கைது செய்யப்பட்ட முருகேசன் என்பவர் மட்டும் தலைமறைவாக இருந்த நிலையில் இன்று அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
Edited by Mahendran