பாத்ரூம் என நினைத்து மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்த குடிகாரர்: சென்னையில் பரிதாபம்
சென்னையை சேர்ந்த டாஸ்மாக் பார் ஊழியர் ஒருவர் குடிபோதையில் நாலாவது மாடியில் கழிப்பறைக்குச் செல்வதற்கு பதிலாக மொட்டை மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே விழுந்த பரிதாபமான சம்பவத்தில் அவர் மரணமடைந்துள்ளார்
சென்னை மண்ணடி வடக்கு கடற்கரை பகுதியை சேர்ந்த பாபு என்ற 45 வயது நபர் சென்னையில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வருகிறார். ராமநாதபுரத்தைச் சேர்ந்த இவர் தனியாக அறை எடுத்து தங்கியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று வேலையை முடித்துவிட்டு தான் குடிப்பதற்காக ஒரு மது பாட்டிலை வாங்கி கொண்டு தனது அறைக்குச் சென்றார். பின்னர் குடிபோதையில் கழிவறைக்கு செல்வது பதிலாக மொட்டை மாடிக்குச் சென்று அங்கு கழிவறையின் வாசலில் காலை வைப்பது போல் மொட்டை மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார்
இதனை அடுத்து கீழே அவர் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
விசாரணையில் அவர் குடிபோதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்த போலீசார், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர்