1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 7 செப்டம்பர் 2022 (16:48 IST)

திராவிட_மாடல் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு!- திமுக பிரபலம் டூவிட் வைரல் வீடியோ

stalin
தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னால் நின்று கம்பீரமாக பேசிய இந்த ஆற்றல்மிகு #தமிழச்சி #திராவிட_மாடல் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு என திமுக பிரமுகர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்தாண்டு  நடந்த சட்டசபைத் தேர்தலில் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்  அதிகத்தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் பல திட்டங்கள் அறிவிக்கபப்ட்டுள் மக்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில், திராவிட மாடல் என்று முதல்வர் ஸ்டாலின்  அவ்வபோது மேடைகள்ல் முழங்கி வரும் நிலையில், திமுக பிரமுகர் டி.ஆர்.பி.ராஜா தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு, ஒரு பதிவிட்டுள்ளார். அதில், 1990ல் ஒரு மாணவியாக ஆயிரம் விளக்கில் மேடையேறி முழங்கினேன் இன்று மீண்டும் உங்கள் முன் பேசுகிறேன் என்று #முதலமைச்சர் @CMOTamilnadu முன்னால் நின்று கம்பீரமாக பேசிய இந்த ஆற்றல்மிகு #தமிழச்சி #திராவிட_மாடல் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு!

ஒரு பெரிய வங்கியில் அவர் இன்று மேலாளர்! என்று தெரிவித்துள்ளார்.