காலையில் குடிப்பவர்களை குடிகாரர் என்று சொல்லாதீர்கள்- அமைச்சர் முத்துச்சாமி
காலையில் குடிப்பவர்களை குடிகாரர் என்று சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.
கோவை ஒண்டிப்புத்தூரில் உள்ள அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் முத்துச்சாமி தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர், அமைச்சர் முத்துச்சாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது. டெட்ரா பேக் திட்டம் 90 எம்.எல் திட்டம் இன்னும் ஆய்வில்தான் இருக்கிறது. அந்த திட்டங்கள் வந்தாலும் வரலாம் வராமலும் போகலாம் ''என்றார்.
மேலும், ''காலையில் 7 மணிக்கு டாஸ்மாக் கடையை திறக்கும் எண்ணமே இல்லை. குடிப்பவர்களை குடிகாரர்கள் என்று சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. கடுமையான பணிகள் செய்யும் சூழலில் உள்ளவர்களை குடிகாரர் என்று கூற வேண்டாம்…ஜாலிக்காக குடிக்கிறவர்களை அப்படி கூறுவதில் தவறில்லை ''என்று கூறியுள்ளார்.