கொடிய விஷமுள்ள பாம்பு ! உரிமையாளரைக் காப்பாற்ற நாய்கள் போராட்டம் !
கோவையில் தோட்டத்தில் கிடந்த பாம்பு ஒன்று தங்கள் உரிமையாளரைக் கடிக்க முயன்றதால அவர் வளர்த்த நாய்கள் அதைக் கடித்துக் கொன்றுள்ளன.
கோயம்புத்தூரில் உள்ள ஒத்தகால்மண்டபம் எனும் பகுதிக்கு அருகே உள்ள பூங்காநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் தனது வீட்டுக்கு அருகே உள்ள நிலத்தில் விவசாயமும் செய்து வருகிறார். மேலும் கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். தனது தோட்டத்துக்கு காவலாக 3 நாய்களையும் வளர்த்து வருகிறார்.
இதையடுத்து நேற்று ராமலிங்கம் தனது கால்நடைகளுக்கு தீவனம் வைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தோட்டத்தில் கிடந்த கண்ணாடி விரியன் பாம்பை பார்க்காமல் அதை நெருங்க ராமலிங்கத்தைக் கடிக்க முயன்றுள்ளது அந்த பாம்பு. உடனடியாக அவரைக் காப்பாற்ற நினைத்த அவரின் நாய்கள் மூன்றும் அந்த பாம்பை பிடித்து கடித்துக் குதறி ராமலிங்கத்தைக் காப்பாற்றியுள்ளன.