வியாழன், 10 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 10 அக்டோபர் 2024 (09:02 IST)

இந்தியாவை யாராவது மிரட்டினால்.. மோடி என்ன செய்வார் தெரியுமா? - டொனால்ட் ட்ரம்ப் கலகல பேச்சு!

Modi Trump

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு ட்ரம்ப் நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியுள்ளார்.

 

 

அமெரிக்காவில் டிசம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டொனால்டு ட்ரம்ப் - கமலா ஹாரிஸ் இடையே போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் நகைச்சுவை ஸ்டாண்டப் காமெடி தொகுப்பாளர்களான ஆண்ட்ரூ ஸ்கல்ஸ் மற்றும் ஆகாஷ் சிங் ஆகியோர் ட்ரம்ப்பை பேட்டி எடுத்தனர்.

 

அதில் பேசிய டொனால்டு ட்ரம்ப் நகைச்சுவையாக பேசியதுடன், இந்திய பிரதமர் மோடி குறித்தும் புகழ்ந்து பேசினார். அதில் அவர் “பிரதமர் மோடி ஒரு அருமையான மனிதர். இந்தியாவை சிலர் அச்சுறுத்திக் கொண்டிருந்தபோது நான் உதவி செய்கிறேன் என முன் வந்தேன். ஆனால் பிரதமர் மோடியோ இதை நான் பார்த்துக் கொள்கிறேன். தேவையானவற்றை நானே பார்த்து கொள்கிறேன். அவர்களை நூற்றாண்டுகளாக நாங்கள் தோற்கடித்து வருகிறோம் என கூறினார்.
 

 

அது எந்த நாடு என்பதை நீங்களே யூகிக்க முடியும். பிரதமர் மோடி சிறந்த நண்பர். தேவைப்படும்போது எதிரி நாடுகளை எதிர்கொள்ளக்கூடிய சிறந்த தலைவர்” என புகழ்ந்து பேசியுள்ளார்.

 

மேலும் 2014ல் மோடி பிரதமராக பதவியேற்கும் முன்பு வரை இந்திய தலைமைத்துவத்தில் நிலையற்ற தன்மை நிலவியதாகவும், அவர் வந்ததும் சிறந்த நாடாகி விட்டதாகவும் கூறிய ட்ரம்ப், வெளிப்புற தோற்றத்தில் அவர் உங்களுடைய தந்தை போன்று காணப்படுவார். அவர் அன்பானவர் என்று கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K