வெள்ளி, 28 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 30 ஜூன் 2016 (17:15 IST)

சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு.

முறைகேடுகள் குறித்து கேள்வி எழுப்பவோம் என்பதற்காக பேச அனுமதிக்கவில்லை என்று குற்றச்சாட்டு.


 
சேலம் மாநகராட்சி மாமன்ற இயல்பு கூட்டம் மேயர் சவுண்டப்பன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் முன்னதாக அவசர தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. துணை மேயர், பின்னர் மண்டலகுழு தலைவர்கள் பேசிமுடித்தவுடன் எதிர்கட்சி தலைவர் பேசுவதற்கு அனுமதிக்கப்படும். 
 
ஆனால் இன்றையதினம் நடைபெற்ற கூட்டத்தில் மண்டலகுழு தலைவர்கள் பேசும்போது மன்றத்தில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக கூறினர். 
தீர்மானம் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதால் அதன்பிறகு அனைத்து உறுப்பினர்களும் கலைந்து சென்றுவிடுவர். அதன்படி இன்றையதினம் எதிர்கட்சி தலைவருக்கு பேச வாய்பு அளிக்காமல் தீர்மானத்தை நிறைவேற்றியதால் திமுக எதிகட்சி தலைவர் புவனேஸ்வரி மற்றும்  அவரது ஆதரவு உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
 
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புவனேஸ்வரி, சேலம் மாநகராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன் மேட்டூர் தடுப்பணை பராமரிப்பு காரணமாக 15 நாட்கள் குடிநீர் உறிஞ்சி சுத்திகரிக்கும் பணி பாதிக்கப்பட்டது. அப்போ டிராக்டர் மூலம் மாநகர பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்ததாக கூறப்படுகிறது. 
 
ஆனால் எந்த பகுதிகளிலும் டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்று குற்றம் சாட்டிய அவர், மேலும் பல்வேறு திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வழங்கவேண்டும் என்று கேட்க திட்டமிட்டிருந்த நிலையில் தங்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படாமல் கூட்டத்தை முடித்துவிட்டதாக தெரிவித்தார்.