ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை , ஒரே கலாச்சாரம் ஒருபோதும் நடக்காது: கனிமொழி எம்பி
ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை ஒரே கலாச்சாரம் ஒரே தேர்தல் ஆகியவை பாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது என திமுக எம்பி கனிமொழி பாராளுமன்றத்தில் பேசி உள்ளார்.
ஒரே நாடு ஒரே வரி சந்தை ஒரே கலாச்சாரம் ஆகியவற்றை உருவாக்க பாஜக நினைக்கிறது என்றும் ஆனால் பாஜக நினைப்பது ஒருபோதும் நடக்காது என்று மக்களவைகள் திமுக எம்பி கனிமொழி தெரிவித்தார்.
தமிழகத்தில் தேர்தல் ஏதுமில்லை என்பதால் ஜனாதிபதி உரையில் திருக்குறள் மேற்காட்டப்படவில்லை என குற்றம் சாட்டிய கனிமொழி உடன்கட்டை ஏறுவது குறித்து மக்களவையில் பெருமையாக பேசுவது வெட்கப்பட வைக்கும் செயல் என்றும் கனிமொழி தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசு சர்வாதிகார போக்கை நோக்கி நகர்கிறது, இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகி வருகிறது என்றும் அவர் பேசினார்.
Edited by Siva