வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (20:32 IST)

சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு வந்த வழக்கு: நாளை தீர்ப்பு

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சட்டசபையில் திமுக எம்எல்ஏக்கள் சிலர் குட்கா கொண்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து சட்டமன்றத்திற்குள் குட்கா கொண்டு வந்தது தொடர்பாக உரிமை மீறல் திமுக எம்எல்ஏக்கள் மீது தொடரப் பட்டது
 
திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட 21 எம்எல்ஏக்கள் மீது தொடர்ந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது
 
இந்த வழக்கின் விசாரணைகள் முழுவதும் முடிவு பெற்றதை அடுத்து நாளை இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு வழங்கவிருக்கும் இந்த தீர்ப்பு திமுக எம்எல்ஏகளுக்கு பாதகமான வந்தால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நாளைய தீர்ப்பை தமிழகம் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது