திங்கள், 30 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (09:54 IST)

சஸ்பெண்டு விவகாரம் ; திமுக உறுப்பினர்கள் போரட்டம் : சட்டப்பேரவையில் பரபரப்பு

திமுக எம்.எல்.ஏக்கள் தர்ணா

தமிழக சட்ட பேரவியில், நேற்று, நடைபெற்ற சட்டசபை கூட்டத்தின் போது, தொடர்ந்து கூச்சல் போட்டதாலும், அமளியில் ஈடுபட்டதாலும் திமுக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றும் படி அவைத்தலைவர் தனபால் உத்தரவிட்டார்.  


 

 
ஆனால், திமுக உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவைக் காவலர்கள், அவர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோரை குண்டு கட்டாக தூக்கி வந்து வெளியேற்றினர்.  
 
மேலும், அவை நடவடிக்கைகளை நடத்த விடாமல், அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தீர்மானம் கொண்டுவந்தார்.  அதை ஏற்று, 88 திமுக உறுப்பினர்களையும் ஒரு வாரத்திற்கு இடை நீக்கம் செய்து அவைத்தலைவர் தனபால் உத்தரவிட்டார்.
 
இந்நிலையில், இன்று காலை பேரவை வளாகத்திற்கு வந்த மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு மற்றும் இதர திமுக உறுப்பினர்கள் அனைவரும் தரையில் கீழே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இன்னும் சிறிது நேரத்தில் மு.க.ஸ்டாலின் அங்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மா.சுப்பிரமணியன் “ எதிர்கட்சி தலைவர் அறைக்கு செல்ல அனுமதி அளிக்க வேண்டும். சட்டசபைக்கு செல்ல வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல” என்று கூறினார்.
 
இதையடுத்து, சட்டசபையின் அனைத்து வாயில்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.