திமுக அரசு தான் பிம் ஸ்ரீ' பள்ளி திட்டத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது: மத்திய கல்வித்துறை..!
திமுக அரசு தான் பிம் ஸ்ரீ' பள்ளி திட்டத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது என மத்திய கல்வித்துறை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:
பிம் ஸ்ரீ திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த இந்திய அரசின் கல்வி அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறது. அடுத்த கல்வியாண்டு 2024-25 தொடங்குவதற்கு முன், புரிந்துணர்வு ஒப்பந்தம் மாநில அரசால் கையெழுத்திடப்படும். தமிழக அரசுக்கும் இந்திய அரசின் கல்வி அமைச்சகத்துக்கும் இடையேயான இந்த ஒப்பந்தம் இருதரப்புக்கும் வலுவான உறவை மேம்படுத்த உதவும். தமிழ்நாட்டு மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்யும் எனத் தெரிவித்திருக்கிறது.
மேலும் இந்த பதிவுடன் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, மத்திய கல்வித்துறை செயலர் சஞ்சய் குமார் ஐஏஎஸ்-க்கு எழுதிய கடிதத்தையும் இணைத்துள்ளது. அந்த கடிதத்தில், தமிழ்நாடு அரசு கல்வித் துறையில் தாக்கங்களை ஏற்படுத்தும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், தங்களுடைய மாணவர்களுக்கு மேம்பட்ட கல்வியை அளிப்பதில் உறுதியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் `பிஎம் ஸ்ரீ' பள்ளிகள் திட்டத்தை அமல்படுத்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறது. இதற்காக பள்ளிக் கல்வித்துறைச் செயலர் தலைமையில் மாநில அளவில் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் 2024-25ம் கல்வி ஆண்டு தொடங்கப்படும் முன் பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தைத் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படும்!" என கூறப்பட்டுள்ளது.
Edited by Mahendran