புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஜூலை 2019 (19:09 IST)

திமுக முன்னாள் மேயர் வெட்டிக்கொலை – நெல்லையில் அதிர்ச்சி சம்பவம்

திருநெல்வேலியின் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரியை அவரது வீட்டிலேயே மர்ம நபர்கள் புகுந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி ரெட்டியார்பட்டியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. திமுக ஆட்சியில் திருநெல்வேலி மேயராக பணிபுரிந்தவர். இன்று மாலை ரெட்டியார்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் மகேஸ்வரியை, அவரது கணவர் மற்றும் அவர்கள் வீட்டு பணிப்பெண் ஆகிய மூவரையும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.

இதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த திடீர் படுகொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.