மதுரையில் திமுகவை தோற்கடித்த அழகிரி?: அதிமுக அமோகம்
மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் அதிமுக 9 தொகுதிகளிலும், திமுக 1 தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது. இது மதுரை திமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக உடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த அழகிரி சட்டசபை தேர்தலின் போது திமுக உடன் ஐக்கியமாவது போல் காட்சிகள் அறங்கேறுவது போல் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அது கைகூடவில்லை. இதனையடுத்து கோபமடைந்த அழகிரி மதுரையில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறாது என கூறினார்.
அழகிரியின் ஆதரவாளர்களும் திமுக வெற்றி பெறக்கூடாது என இந்த தேர்தலில் செயல்பட்டதாக பேசப்படுகிறது.
இந்நிலையில் அழகிரி சொன்னது போல் மதுரையில் திமுக மண்ணை கவ்வியுள்ளது. மேலூர், மதுரை கிழக்கு, சோழவந்தான், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி என மதுரையின் 10 தொகுதிகளில் திமுக மதுரை மத்திய தொகுதியில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. மற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிமுக முன்னிலையில் உள்ளது.